boticon

மருத்துவர்களுக்கான தனி நபர் கடனின் அம்சங்கள் மற்றும் பயன்கள்

தனிப் பயனாக்கப்பட்ட வட்டி விகிதங்கள்

அசல் கடன் தொகை எப்போதும் ஒரு வட்டி விகிதத்துடன் வசூலிக்கப்படுகிறது. ஒரு மருத்துவருக்கான தனி நபர் கடன் மீது விதிக்கப்படும் வட்டி விகிதம் அவர்களின் மருத்துவ விவரம் மற்றும் வருமான வரம்பை பொறுத்தது. இது மருத்துவர்களின் கடன்கள் மீது தகுந்த வட்டி விதிக்கப்பட்டு கடனைத் திரும்ப செலுத்துவது அவர்களுக்கு ஒரு சுமையாக இல்லாதிருப்பதை உறுதி செய்கிறது

பிணையத்தினால் உண்டாகும் அழுத்தம் இல்லை

தனிநபர் கடனுக்கு பிணையம் இல்லாததால், சொத்துக்களையோ உடைமைகளையோ கடனுக்காக அடமானம் வைக்கத் தேவையில்லை. ஒரு தனி நபர் கடன் குறைந்த நேரத்திலேயே ஒப்புதல் பெறுவதற்கான காரணங்களில் இதுவும் ஒன்று. எனவே, மருத்துவர்களுக்கான தனி நபர் கடனும் கூட ஒப்புதலுக்கு பிணை கோராத மருத்துவர் கடனாக பாதுகாப்பற்ற கடன்களின் வகையிலேயே வரும்.

தனிப்பயனாக்கப்பட்ட கடன் மேலாண்மை

மொபைல் ஃபோனில் உள்ள உடனடி கடன் appகள் மருத்துவர்கள் தங்கள் கடன் விண்ணப்பம், ஆவணமாக்கல் மற்றும் கடனின் நிலை இவற்றை எளிதில் நிர்வகிக்க உதவுகிறது. உடனடி கடன் appகள் மூலம் மருத்துவர்களின் கடனுக்கான தனி நபர் கடன் நிலையை சரிபார்ப்பது ஒரு சிறந்த வழியாகும் ஏனெனில் தங்களின் பரபரப்பான கால அட்டவணைக்கு தொந்தரவு இன்றி, மருத்துவர்கள் தங்களின் தனி நபர் கடன் தொடர்பான எதையும் நிமிடங்களில் சரிபார்க்க முடியும்.

எளிமையான ஆவணமாக்கல்

ஆவணங்கள் டிஜிடல் வடிவில் சேர்க்கப்பட்டிருப்பதால், கட்டாய ஆவணங்களின் நகல்கள் இனி தேவையில்லை. மருத்துவர்களுக்கான தனி நபர் கடன்களைப் பெற, கடனாளிகள் சாஃப்ட் காப்பிகளை அப்லோட் செய்ய வேண்டும் அல்லது மருத்துவர் கடன்களின் E-KYC சரிபார்ப்புக்கு அவர்களது தனிப்பட்ட ஆவணங்களான ஆதார் கார்டு எண், PAN எண், போன்றவற்றில் கொடுக்கப் பட்டிருக்கும் அங்கீகரிக்கப்பட்ட குறியீடுகளை உள்ளிட வேண்டும்.

தானாகவே EMI-ஐ கழிக்கும் தேர்வு

மருத்துவர்களின் தனி நபர் கடன் ஒப்புதலாகி வழங்கப்பட்ட பின், அவர்கள் ஒவ்வொரு மாதமும் EMI செலுத்த வேண்டிய தேதியை நினைவில் வைத்திருக்க வேண்டியதில்லை. தானியங்கி டெபிட் தேர்வினால், மருத்துவர்களின் கடனுக்கான EMI கணக்கிலிருந்து தானாகவே கழிக்கப்பட்டு விடும் மற்றும் கட்டணங்கள் தவற விடப் படாது.

மருத்துவர்களின் தனி நபர் கடனுக்கான தகுதி அளவுகோல்கள்

இந்தியாவில் உள்ள நிதி நிறுவனங்கள், பல்வேறு வருமான குழுக்களின் நிதித் தேவையை பூர்த்தி செய்ய தனி நபர் கடன் APPகளை உருவாக்கின. மருத்துவர்களுக்கான கடனும் கூட மருத்துவ நிபுணர்களின் வெவ்வேறு நிதித் தேவைகளை பூர்த்தி செய்ய உதவும் ஒரு வகையான தனி நபர் கடன்தான். கடன் விண்ணப்பத்திற்கு முன்னரான தகுதி சரிபார்ப்பை போல, மருத்துவர்களுக்கான தனி நபர் கடனுக்கும் நிர்ணயிக்கப்பட்ட தகுதி வரம்புகள் உண்டு. மருத்துவர்களுக்கான தனி நபர் கடன் தகுதி, அவர்களது வருமானம்/சம்பளம், மற்றும் குறிப்பிட்ட காலத்துக்குள் கடனைத் திரும்ப செலுத்தும் திறன் ஆகியவற்றை பொறுத்தது:

 

01

மருத்துவர்களது பட்ட படிப்பு சான்றிதழ் மற்றும் தகுதி பெற்ற பின்னான அனுபவ சான்றிதழ்

02

மருத்துவர்களுக்கு சொந்தமாக ஒரு வீடு, கிளினிக் அல்லது ஹாஸ்பிடல் இருக்க வேண்டும்

03

மருத்துவ பதிவு சான்றிதழ்

04

சம்பளம்/வருமானம் வரவு வைக்கப்படும் செயலில் இருக்கும் ஒரு வங்கிக் கணக்கு விவரங்கள்

05

வணிகச் சான்று

06

மருத்துவர்களின் வயது 21லிருந்து 58க்குள் இருக்க வேண்டும்.

07

அடையாளச் சான்று (ஆதார் கார்டு/பாஸ்போர்ட்/ஓட்டுன-ர் உரிமம்)

08

முகவரி சான்று (ரேஷன் கார்டு/பாஸ்போர்ட்/மின்சார பில்/தொலைபேசி பில்)

09

வருமான சான்று (6 மாதங்களுக்கான வங்கி கணக்கு அறிக்கை & வருமான வரி கணக்கு தாக்கல் கோப்பு)

மருத்துவர்களின் தனி நபர் கடனுக்கான தகுதி அளவுகோல்கள்

இந்தியாவில் உள்ள நிதி நிறுவனங்கள், பல்வேறு வருமான குழுக்களின் நிதித் தேவையை பூர்த்தி செய்ய தனி நபர் கடன் APPகளை உருவாக்கின. மருத்துவர்களுக்கான கடனும் கூட மருத்துவ நிபுணர்களின் வெவ்வேறு நிதித் தேவைகளை பூர்த்தி செய்ய உதவும் ஒரு வகையான தனி நபர் கடன்தான். கடன் விண்ணப்பத்திற்கு முன்னரான தகுதி சரிபார்ப்பை போல, மருத்துவர்களுக்கான தனி நபர் கடனுக்கும் நிர்ணயிக்கப்பட்ட தகுதி வரம்புகள் உண்டு. மருத்துவர்களுக்கான தனி நபர் கடன் தகுதி, அவர்களது வருமானம்/சம்பளம், மற்றும் குறிப்பிட்ட காலத்துக்குள் கடனைத் திரும்ப செலுத்தும் திறன் ஆகியவற்றை பொறுத்தது:

1

மருத்துவர்களது பட்ட படிப்பு சான்றிதழ் மற்றும் தகுதி பெற்ற பின்னான அனுபவ சான்றிதழ்*

2

மருத்துவர்களுக்கு சொந்தமாக ஒரு வீடு, கிளினிக் அல்லது ஹாஸ்பிடல் இருக்க வேண்டும்*

3

மருத்துவ பதிவு சான்றிதழ்*

4

சம்பளம்/வருமானம் வரவு வைக்கப்படும் செயலில் இருக்கும் ஒரு வங்கிக் கணக்கு விவரங்கள்

5

வணிகச் சான்று

6

மருத்துவர்களின் வயது 21லிருந்து 58க்குள் இருக்க வேண்டும்.

7

அடையாளச் சான்று (ஆதார் கார்டு/பாஸ்போர்ட்/ஓட்டுன-ர் உரிமம்)

8

முகவரி சான்று (ரேஷன் கார்டு/பாஸ்போர்ட்/மின்சார பில்/தொலைபேசி பில்)

9

வருமான சான்று (6 மாதங்களுக்கான வங்கி கணக்கு அறிக்கை & வருமான வரி கணக்கு தாக்கல் கோப்பு)

ஒவ்வொரு கடன் வழங்குபவரையும் பொறுத்தது

மருத்துவர்களுக்கான தனி நபர் கடனுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?

ஒரு மருத்துவராக அல்லது சுகாதாரப் பயிற்சியாளராக இருப்பது ஒரு நோயாளியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த தேவையான திறன், அறிவு மற்றும் அனுபவம் வாய்ந்த ஒரு பொறுப்பான தொழிலாகும். மருத்துவ சிகிச்சையின் தரத்தை மேம்படுத்த, பல மருத்துவர்கள் மருத்துவர்களுக்கான ஒரு தனி நபர் கடனைத் தேர்வு செய்கிறார்கள். தொழில்முறைக் காரணங்களைத் தவிர, மருத்துவர்களுக்கான கடன்கள் தனிப்பட்ட நிதிக் கடமைகளுக்காகவும் உபயோகப் படுத்தலாம். மருத்துவர்கள் ஒரு தனி நபர் கடனை ஆன்லைனில் விண்ணப்பிக்க ஒரு உடனடி வழியை தேர்ந்தெடுக்கலாம்:

how-to-apply-for-doctor-loan (1).webp

  • 01

    கூகிள் ப்ளே ஸ்டோர் மூலமாக உங்கள் ஆண்டிராய்ட் ஃபோனில் ஒரு தனி நபர் கடன் app-ஐ நிறுவுங்கள்

  • 02

    உங்கள் இ-மெயில் ஐடி அல்லது மொபைல் எண்ணை உபயோகித்து பதிவு செய்யுங்கள்

  • 03

    கட்டாயப் புலங்களை கருத்தில் கொண்டு கடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யுங்கள்

  • 04

    ஒரு பொருந்தக் கூடிய EMI-ஐ கண்டு பிடிக்க, கடன் EMI கால்குலேட்டரை உப்யோகியுங்கள். மாறுபடுகிறவைகளை நெகிழ்வாக மாற்ற, ஸ்லைடரை உபயோகியுங்கள்

  • 05

    கடனுக்கான முன்-தேவைகளை-ஆதார் கார்டு, ஆதார் கார்டுடன் இணைக்கப் பட்ட மொபைல் எண் (OTP–க்காக), PAN கார்டு, மற்றும் வங்கிக் கணக்கு விவரங்கள்

  • 06

    சரிபார்ப்பிற்குப் பிறகு, கடன் ஒப்புதல் மற்றும் விநியோகம் 48 மணி நேரத்திற்குள் செய்யப்படுகிறது

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

மருத்துவர்களுக்கான தனி நபர் கடன்களுக்கு ஆன்லைனில் உடனடி கடன் appகள் மூலமாக விரைவாக விண்ணப்பிக்க முடியும். ஆன்லைனில் ஒரு தனி நபர் கடனுக்கு விண்ணப்பிக்க மருத்துவர்களுக்கு இது தான் மிக எளிய வழி மற்றும் ஒரு கடன் விண்ணப்பத்திற்காக வங்கிக் கிளைக்கு நேரடியாக செல்லும் நேரத்தையும் மிச்சப் படுத்த முடியும்.
ஒரு மருத்துவர் கடனுக்கென ஒரு குறிப்பிட்ட நிலையான கடன் தொகை எதுவும் கிடையாது. ஒரு மருத்துவருக்கான கடன் தொகை முற்றிலுமாக கடன் வழங்குபவரது அதிகபட்ச கடன் வரம்பைப் பொறுத்தே அமைகிறது. இது வெவ்வேறு கடன் வழங்குபவர்களுக்கு ஏற்ப மாறுபடலாம்.
ஒரு உடனடி கடன் app-ஐ டவுன்லோட் செய்வதன் மூலம் நீங்கள் ஒரு மருத்துவர் கடனைப் பெறலாம். கடன் விண்ணப்ப செயல்முறைகளைப் பின்பற்றி, சரிபார்ப்பிற்காக ஆவணங்களை ஆன்லைனில் சமர்ப்பித்து, ஒப்புதலுக்காக காத்திருந்து, 24 மணி நேரத்துக்குள் கடன் தொகை வினியோகத்தைப் பெறலாம்.
ஒரு தனிப்பட்ட ஆன்லைன் கடனுக்கு விண்ணப்பிக்க, மருத்துவர்கள் EMI கால்குலேட்டர் அல்லது வட்டி விகித கால்குலேட்டரை உபயோகித்து அவர்கள் கடன் தொகையின் மீது விதிக்கப்பட்ட வட்டியை அறிந்து கொள்ள முடியும். அது ஒவ்வொரு கடன் வழங்குபவர்களுக்கும் மாறுபடுகிறது மற்றும் உங்கள் அசல் தொகை மற்றும் கடன் காலக் கெடுவைப் பொறுத்தும் மாறலாம்.
ஆமாம். மருத்துவர்கள் தொழில்முறை மற்றும் தனிப்பட்ட காரணங்கள் இரண்டிற்காகவும் கடன் பெற முடியும். மருத்துவர் கடன்களை மருத்துவ சிகிச்சைகளை மேம்படுத்த, கிளினிக்கை விரிவு செய்ய, அல்லது தனிப்பட்ட நிதித் தேவைகளான மேற்படிப்புக்கான இலக்குகளை பூர்த்தி செய்ய, பயணங்கள், புனரமைப்புகள் போன்ற காரணங்களுக்காகவும் பெற முடியும்.
மருத்துவர்கள் அவர்களது ஆதார் கார்டு மற்றும் உங்கள் மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்ட PAN கார்டு போன்ற அடிப்படை அடையாள சான்றுகளுடன் மருத்துவ சான்றிதழ் மற்றும் தகுதி பெற்றதற்கு பிறகான தாள்கள் அனைத்தையும் சமர்ப்பிக்க வேண்டும். உங்கள் ஆதார் கார்டு இல்லாத பட்சத்தில், பாஸ்போர்ட்/ஓட்டுனர் உரிமம்.
ஆவண செயலாக்கம் முடிந்து சரிபார்க்கப்பட்டதும், மருத்துவர்களுக்கான கடன் 48 மணி நேரத்திற்குள் விநியோகிக்கப்படும்.
மருத்துவர்களுக்கான தனி நபர் கடன் தகுதி அளவுகோல்கள் அவர்களது வருமானம்/சம்பளம், மற்றும் குறித்த காலக் கெடுவிற்குள் கடனைத் திரும்ப செலுத்தும் திறன் போன்றவற்றின் அடிப்படையில் அமையும்.
மருத்துவர்களுக்கான தனி நபர் கடன் தகுதி அளவுகோல்கள் அவர்களது வருமானம்/சம்பளம், மற்றும் குறித்த காலக் கெடுவிற்குள் கடனைத் திரும்ப செலுத்தும் திறன் போன்றவற்றின் அடிப்படையில் அமையும்.