H.Ai Bot Logo
H.Ai Bot
Powered by GPT-4
Terms of Service

I have read through the Terms of Service for use of Digital Platforms as provided above by HFCL and I provide my express consent and agree to the Terms of Service for use of Digital Platform.

மருத்துவ கடன் அம்சங்கள் மற்றும் பயன்கள்

ஒரு நெருங்கிய குடும்ப உறுப்பினர் உடல் நலக் குறைவுடன் போராடிக் கொண்டிருக்கும் போது, அவருக்கு நிவாரணம் வழங்குவதை தவிர வேறு எதுவும் நினைவுக்கு வருவதில்லை. சேமிப்பு குறைவாக இருந்து மருத்துவ செலவுகள் அதிகமாக இருக்கும் போதும், ஒரு உடனடி மருத்துவ கடன், மருத்துவ அவசரத்துக்கு நிதி திரட்ட ஒரு நம்பகமான வசதி. ஒரு ஆன்லைன் மருத்துவ கடனின் அம்சங்கள் மற்றும் பயன்களை அறிந்து கொள்ளுங்கள்:

t1.svg
விரைவான கடன் ஒப்புதல்கள்

மருத்துவ அவசரங்கள் காத்திருக்க முடியாது. உடனடியாக பணத்துக்கான ஏற்பாட்டை செய்ய வேண்டும். உடனடி தனி நபர் கடன் app-கள் சில மணி நேரத்தில் கடன் தொகையை உங்கள் கணக்கில் நேரடியாகவே செலுத்தி விடுகின்றன. இதற்கு மாறாக, ஆஃப் லைன் கடன்களுக்கு ஒப்புதலுக்கே வாரக்கணக்கில் காத்திருக்க வேண்டியிருக்கிறது.

 

t2.svg
ஃபிஸிகல் ஆவணமாக்கல் இல்லை

ஒரு மருத்துவ கடனை உடனடி கடன் app வழியாக வாங்குவதற்கு மற்றொரு முக்கிய காரணம் அதன் காகிதமற்ற ஆவணமாக்கல் செயல்முறை. இதற்கு எந்த வித காகித வேலையும் தேவையில்லை. தேவைப்படும் குறைந்தபட்ச ஆவணங்கள் விரும்பித் தேர்ந்தெடுக்கப்பட்ட உடனடி கடன் app-ல் அப்லோட் செய்யப்பட்டு உடனடி ஒப்புதலுக்கு நிகழ் நேரத்திலேயே செயலாக்கப்படுகிறது.

 

t3.svg
நெகிழ்வான திரும்பசெலுத்தும் தேர்வு

கடன் வாங்குபவர்கள் EMI -களை செலுத்துவதற்கான தேதி மற்றும் காலத்தை தேர்ந்தெடுக்கலாம். கடனை திரும்ப செலுத்துவது வசதியாக ஆனதால், நெகிழ்வான திரும்ப செலுத்தும் தேர்வு உங்களை அதிகமாக கடன் வாங்க ஊக்குவிக்கிறது.

 

t4.svg
கடன் EMI கால்குலேட்டர்

EMI கால்குலேட்டர் உடனடி கடன் appகளில் அமைக்கப்பட்ட ஒரு அம்சமாகும். இது கடன் தொகை, காலக் கெடு மற்றும் வட்டி விகிதத்தை உங்கள் திரும்ப செலுத்தும் திறனுக்கு ஏற்றவாறு முடிவு செய்யும் நெகிழ்வை வழங்குகிறது

எப்படி ஹீரோஃபின்கார்ப் மூலம் ஆன்லைனில் மருத்துவ கடனுக்கு விண்ணப்பிப்பது?

மெடிக்ளெய்ம் இல்லாத நோயாளிகள் அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்கள் ஒரு உடனடி ஆன்லைன் மருத்துவ கடனுக்கு விண்ணப்பிக்கலாம். ரூ.50,000-த்திலிருந்து ரூ.1.5 லட்சம் வரையான ஒரு உடனடி மருத்துவ கடனைப் பெற சரியான ஆதாரம் ஹீரோஃபின்கார்ப் போன்ற ஒரு விரைவான உடனடி கடன் app. கூகிள் பிளே ஸ்டோரிலிருந்து ஹீரோஃபின்கார்ப்-ஐ இலவசமாக டவுன்லோட் செய்து ஆன்லைன் மருத்துவ கடன் செயல்முறையை துவக்குங்கள்:

how-to-apply-for-doctor-loan (1).webp

  • 1

    சரிபார்ப்புக்கு ஒரு OTP எண்ணைப் பெறுவதற்கு ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்ட உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்யுங்கள் அல்லது இ-மெயில் ஐடியை உள்ளிடுங்கள்

     

  • 2

    உங்கள் ஆதார் கார்டு எண்ணை அல்லது ஸ்மார்ட் கார்ட் ஓட்டுனர் உரிமத்தை உள்ளிடுங்கள்

     

  • 3

    கடன் EMI கால்குலேட்டரின் மூலமாக கடன் தொகை மற்றும் காலத்தை தேர்ந்தெடுங்கள்

     

  • 4

    இறுதியாக, டிஜிட்டலைஸ் செய்யப்பட்ட KYC ஆவணங்கள் மூலம் உங்கள் தனிப்பட்ட, நிதி மற்றும் வேலை விவரங்களை பூர்த்தி செய்யுங்கள்

     

  • 5

    பட்டியலிடப்பட்ட வங்கிகளிலிருந்து, உங்கள் வங்கியை தேர்வு செய்யுங்கள் மற்றும் உங்கள் கடன் தொகையை செலுத்த வேண்டிய வங்கி கணக்கு விவரங்களை உள்ளிடுங்கள்

ஒரு மருத்துவ அவசர நிலை காத்திருக்க முடியாது. உங்கள் பிரியமானவரின் மருத்துவ சிகிச்சைக்கு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நிதி தேவை. மருத்துவக் கடன் எந்தக் காரணத்துக்காகவும் தாமதமாகாமலிருப்பதை உறுதி செய்ய, கடன் வாங்குபவர்கள் தகுதி அளவுகோல்கள் மற்றும் ஒரு ஆன்லைன் மருத்துவ கடனுக்கு தேவையான ஆவணங்கள் குறித்து நன்றாக அறிந்திருக்க வேண்டும்:
1

வயது அளவுகோல்: விண்ணப்பிப்பவர் 21-58 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும்

 

2

சம்பளம் வாங்குபவர்களுக்கான குறைந்தபட்ச சம்பளம் : விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச மாத வருமானம் ரூ. 15,000-ஆக இருக்க வேண்டும்

 

3

சுயதொழில் செய்பவர்க்கான குறைந்தபட்ச மாத வருமானம்: ரூ.15,000 மற்றும் கடைசி 6 மாத வங்கி அறிக்கை கட்டாயம் தேவை

 

4

வருமான சான்று: சம்பளம் அல்லது தனி நபர் கணக்கின் 6 மாத வங்கி அறிக்கை

 

5

தனி நபர் உடனடி கடனுக்கு விண்ணப்பிக்கும் போது ஆதார் கார்டுதான் முதல் ஆவணம்

 

6

ஆதார் கார்டு இல்லாத நிலையில், நீங்கள் Pan கார்ட்/ஓட்டுனர் உரிமம் போன்றவற்றை சமர்ப்பிக்கலாம்

 

7

மற்ற முக்கியமான ஆவணங்கள் உங்கள் தொழில்முறை மற்றும் நிதி விவரங்களுடன் 6 மாதத்திற்கான வங்கி கணக்கு அறிக்கை உள்ளிட்டவை

 

8

நிதி நிறுவனங்களால் பரிந்துரைக்கப்பட்டபடி உங்கள் கணக்கு ஒப்புக்கொள்ளப்பட்ட ஏதாவது ஒரு வங்கியில் இருக்க வேண்டும்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

ஆன்லைன் உடனடி கடன் appகள் மூலமாக விண்ணப்பிப்பதே ஓரு மருத்துவ கடனைப் பெறுவதற்கான மிக விரைவான வழி. ஹீரோஃபின்கார்ப், மருத்துவ அவசரங்களின் போது உங்கள் நிதி ஆதரவாக இருக்க கூடிய ஒரு நம்பகமான உடனடி கடன் app. ஹீரோ ஃபின் கார்ப்-ஆல் நிறுவப்பட்ட ஹீரோஃபின்கார்ப் app மூலம் நீங்கள் ரூ.1,50,000 வரையான ஒரு மருத்துவ கடனை 24 மணி நேரத்தில் பெற முடியும்.
ஆம். நீங்கள் அதிக செலவினங்களான மருத்துவ கட்டணங்கள் மற்றும் தொடர்புடைய இதர செலவுகளை சமாளிக்க ஒரு அவசர மருத்துவ கடனை பெற முடியும். கடன் வாங்குபவர்கள் கடன் வழங்குபவர்கள் நிர்ணயித்த தகுதி வரம்புகள் மற்றும் கட்டாய ஆவணங்களை கடைபிடிக்க வேண்டும்.
ஒரு கிரெடிட் ஸ்கோர் கடன் வாங்குபவரது நிதி வரலாறு மற்றும் கடனை திரும்ப செலுத்தும் திறனை பிரதிபலிக்கிறது. மருத்துவ கடனுக்கு விண்ணப்பிக்கும் கடனாளிகள் 900-த்துக்கு நெருக்கமாக கிரெடிட் ஸ்கோரை பெற்றிருக்க வேண்டும். இது 24 மணி நேரத்துக்குள் கடன் ஒப்புதலைப் பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.
நீங்கள் ஒரு மருத்துவ அவசர கடனை ஆன்லைன் உடனடி கடன் appகள் மூலம் பெற முடியும். இது உங்கள் ஸ்மார்ட் ஃபோனில் உள்ள விரைவான ஆன்லைன் ஆதாரம். நீங்கள் ஆஸ்பத்திரியில் இருந்தாலும், ஆன்லைன் தனிநபர் உடனடி கடன் app மூலமாக நீங்கள் ஒரு உடனடி மருத்துவ கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.
கடன் வழங்குபவரால் நிர்ணயிக்கப்படும் தகுதி வரம்புகளை பூர்த்தி செய்வதன் மூலம் நீங்கள் ஒரு மருத்துவ கடனுக்கு தகுதி பெறலாம். நிதி நிறுவனங்கள் தாமதிக்கப்பட்ட பணம் செலுத்துதலையோ அல்லது எந்த விதமான மோசடிகள் தொடர்பான அபாயங்களையோ எதிர்கொள்ள விரும்பாததால், தகுதி வரம்புகளை கட்டாயமாக ஆக்குகின்றன.
மருத்துவ கடன் என்பது மருத்துவ செயல்முறைகள் மற்றும் சிகிச்சைகளுக்கான அவசர நிதியை திரட்ட உதவும் ஒரு வகை தனி நபர் கடன்.
ஆதார் கார்டு, சம்பள சீட்டுகள் மற்றும் வங்கிக் கணக்கு அறிக்கை உள்ளிட்ட அடையாள சான்றுகள் மற்றும் வருமான ஆவணங்கள் மருத்துவ கடனுக்கு கட்டாய தேவையான ஆவணங்களாகும்.
ஆதார் கார்டு, சம்பள சீட்டுகள் மற்றும் வங்கிக் கணக்கு அறிக்கை உள்ளிட்ட அடையாள சான்றுகள் மற்றும் வருமான ஆவணங்கள் மருத்துவ கடனுக்கு கட்டாய தேவையான ஆவணங்களாகும்.
கடன் வாங்குபவர்கள் ஆன்லைன் உடனடி கடன் appகள் மூலமாகவோ, வாடிக்கையாளார் சேவை ஆதரவு மூலமோ அல்லது கிளைக்கு நேரடியாக செல்வதின் மூலமாகவோ மருத்துவ கடன்களுக்கு விண்ணப்பிக்கலாம்.