• Home
  • >
  • Blog
  • >
  • Personal Loan
  • >
  • Pan கார்ட் மற்றும் ஆதார் கார்டின் மீது தனி நபர் கடன் பெறுங்கள்

Pan கார்ட் மற்றும் ஆதார் கார்டின் மீது தனி நபர் கடன் பெறுங்கள்

முன்னர் ஆதார் கார்டின் மீதோ அல்லது PAN கார்டின் மீதோ தனிநபர் கடன் கிடைக்காமலிருந்தது ஏனெனில் கடன் அனுமதிக்கு முன்னர் கடன் செயல்முறையில்  ஒருசில சம்பிரதாயங்களின் பட்டியலை முடிக்க வேண்டியிருந்தது. உடனடி கடன் app-கள் பிரபலமாகத் தொடங்கியதும், தனி நபர் கடன் அனுமதி காகிதமற்றதாக மாறியது மற்றும் இங்கு ஆவண சரிபார்ப்பில், ஆதார் கார்டுகள் மற்றும் PAN கார்டுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

வீட்டுக் கடன்களைப் போல அல்லாமல், ஒரு தனி நபர் கடன் பாதுகாப்பற்ற கடன். வீட்டு சீரமைப்பு, கல்யாண செலவுகள், ஒரு லேப்டாப் அல்லது ஒரு மொபைல் ஃபோன் வாங்க என்று பல காரணங்களுக்காக குறைந்தபட்ச ஆவணங்களான உங்கள் ஆதார் கார்ட் மற்றும் PAN கார்டுடன், ஒரு தனி நபர் கடனை பெற முடியும். அவசரமாக பணம் தேவைப்படும் நபர்களுக்கு, தனி நபர் கடன் ஒரு வரப்பிரசாதமாக விளங்குகிறது. ஒரு மருத்துவ அவசரத்தின் போது இது ஒரு உயிர் காப்பானாகவும் உள்ளது.
எனவே, இந்திய நிதி நிறுவனங்கள் தனி நபர் கடன் ஒப்புதலுக்கு கட்டாயத் தேவையான ஆவணங்களின் பட்டியலை குறைத்திருக்கின்றன. ஆதார் மற்றும் PAN கார்டின் KYC சரிபார்த்தலுடன் மட்டுமே கடன் வாங்குபவர்கள் ஒரு தனி நபர் கடனை எளிதில் பெற முடியும்.  தற்போது, பெரும்பாலான உடனடி கடன் app-களில்,உங்கள் மொபைல் எண்ணுடன் பதிவு செய்யப்பட்ட ஆதார் கார்ட் எண் மற்றும் PAN கார்ட் எண்ணை உபயோகித்து ஆவணமாக்கம் காகிதமற்றதாகி விட்டது.
To Avail Personal Loan
Apply Now

ஆதார் மற்றும் PAN கார்டுடன் எளிதான கடன் ஆவணமாக்கல்


இப்போது கடன் வாங்குபவர்கள் ஆதார் மற்றும் PAN கார்ட் அடிப்படையில் உடனடி கடன்களை பெறுமளவு தொழில் நுட்ப கண்டுபிடிப்புகள் வெற்றியடைந்திருகிறது. KYC ஆவணங்கள்(ஆதார் மற்றும் PAN கார்ட்) மீதான தனி நபர் கடன், முழுதுமாக ஒரு காகிதமற்ற செயல்முறையில் வழங்கப்படும் கடன் அனுமதி ஆனதால் கடன் செயல்முறை துரிதப்படுத்தப்படுகிறது.
தற்போது நிலவும் டிஜிடல் யுகத்தில், நிதி நிறுவனங்கள் குறைவான ஆவணங்களுடன் கடன் பெற ஒரு எளிதான வழியை உருவாக்கி இருக்கின்றன. விண்ணப்ப படிவங்கள் மற்றும் ஆவணங்களை சமர்ப்பிக்கும் பாரம்பரிய முறையைப் போல அல்லாமல், ஆன்லைன் தனிநபர் கடனை, ஆதார் மற்றும் PAN கார்ட் விவரங்களை உபயோகித்து எளிதாகவும் மற்றும் வேகமாகவும் பெற முடிகிறது.


குறைந்த ஆவணங்களோடு ஆன்லைன் தனிநபர் கடனால் பயனடைய சில எளிய வழிமுறைகள்

 
  • உங்கள் ஆன்ட்ராய்ட் ஃபோனில் கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து தனிநபர் கடன் app-ஐ டவுன்லோட் செய்யுங்கள்
  • எளிதான சைன்-அப் & லாக்-இன் முறை
  • ஆவண எண் அல்லது ஆதார் கார்ட் மற்றும் PAN கார்ட் சாஃப்ட் காப்பிகளை கடன் வழங்குபவரிடம் சமர்ப்பிக்கவும்
  • சில கடன் வழங்குபவர்கள் உங்கள் மொபைலுடன் இணைக்கப்பட்ட ஆதார் கார்டு எண் அல்லது பான் கார்டை பதிவு செய்தலே உங்கள் நிதி விவரங்களுக்கு போதுமானது என அனுமதிக்கிறார்கள்
  • ஒரு உடனடி தனி நபர் கடன் பெற, காகிதமில்லா e-KYC ஆவணங்களாக ஆதார் கார்டு மற்றும் Pan கார்டு உபயோகப்படுகின்றன.
  • முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம்
  • பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்
 

ஆதார் மற்றும் PAN கார்ட்–மூலமாக பெறும் ஒரு உடனடி கடனின் அம்சங்கள் மற்றும் பயன்கள்


நிமிடங்களில் ஒரு தனிநபர் கடன் ஒப்புதல் ஆகி கடன் தொகை 24 மணி நேரத்தில் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என யாரும் இதுவரை நினைத்துப் பார்த்திருக்கவே முடியாது. கடன் செயலாக்க பாதை உடனடி தனிநபர் கடன் app-களால் மாறியது ஏனெனில் ஆதார் மற்றும் PAN கார்டு மூலம் கடனாளியின் விவரங்கள் சரிபார்க்கப்படுகிறது. ஆன்லைன் தனிநபர் கடனை சிக்கலற்ற முறையில் பெற ஆதார் மற்றும் PAN கார்டுகளின் முக்கிய அம்சங்கள் மற்றும் பயன்களை பற்றிய உங்கள் அறிவை மேம்படுத்திக் கொள்ளுங்கள்:
 
  • மறைந்திருக்கும் கட்டணங்கள் ஏதும் விதிக்கப்படவில்லை
  • 2-3 வருடங்கள் வரை கடனை நிதானமாக திரும்பிச் செலுத்துதலாம்
  • உங்கள் கிரெடிட் ஸ்கோரின் அடிப்படையில் குறைந்த வட்டி விகிதம்
  • தனிப்பயனாக்கப்பட்ட கடன் தொகை மற்றும் EMIகள்
 

ஆதார் மற்றும் Pan கார்டுகளுடன் பெறும் தனி நபர் கடனுக்கான தகுதி வரம்பு


ஆதார் மற்றும் PAN கார்டு ஆகியவை, பெரும்பாலான கடன் வழங்குபவர்களின் தகுதி வரம்பில் ஒரு பகுதியான E-KYC சரிபார்ப்பின் இரண்டு முக்கியமான ஆவணங்களாகும். எனவே, தனி நபர் கடன் பதிவு செயலாக்கத்தின் போது ஆதார் மற்றும் PAN கார்டு எண்களை பதிவு செய்வது கட்டாயமாகும்.
 
  • வயது 21 - 58க்குள் இருக்க வேண்டும்.
  • இந்திய குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டும்
  • ஒரு தனியார் அல்லது பொதுத் துறை நிறுவனத்தில் வேலை செய்பவராக இருக்க வேண்டும்
  • குறைந்தபட்ச மாத சம்பளம் ரூ.15,000-ஆக இருக்க வேண்டும்
 

உடனடி கடன் விண்ணப்பம்


ஆன்லைன் உடனடி தனி நபர் கடன் app-களே நவீன பாணியாகும் மற்றும் கடன் விண்ணப்பதாரர்கள் ஆதார் மற்றும் Pan கார்டை மட்டுமே சமர்ப்பித்து காகிதமற்ற ஆவணமாக்குதலை உபயோகிப்பதை எளிதாக உணர்கிறார்கள். உடனடி ரொக்க கடன் விண்ணப்பத்திற்கு எந்த ஃபிசிகல் ஆவணமும் தேவைப்படுவதில்லை மற்றும் அது ஆதார் கார்டு மற்றும் PAN கார்டை ஆன்லைனில் சமர்ப்பிப்பதின் அடிப்படையில் அமைகிறது. எனினும், இது கடன் வழங்குபவர்கள் ஒவ்வொருவரையும் பொறுத்து மாறுபடும். சில கடன் வழங்குநர்கள் பதிவுகளுக்காக KYC ஆவணங்களின் நகல்களைக் கேட்கலாம் ஒரு உடனடி கடன் விண்ணப்பத்திற்கு உடனடியாக 24 மணி நேரத்திற்குள் ஒப்புதல் அளிக்கப்படுகிறது.


உடனடி தனி நபர் கடனில் ஆதார் கார்டு மற்றும் PAN கார்டின் பலன்கள்


இறுதியாக, ஒரு உடனடி கடனுக்கென, ஆதார் கார்டு மற்றும் Pan கார்டு இரண்டும் அத்தியாவசிய ஆவணங்களாகும். ஏப்ரல் 2010-ல் அறிமுகப்படுத்தப்பட்ட ஆதார் கார்டு கடன் சூழ்நிலையை முற்றிலும் மாற்றியது. நீண்ட நேரம் வரிசையில் கடன் ஒப்புதலுக்காக நின்றிருப்பது மறைந்தது. இப்போது KYC ஆவணங்களுக்கெதிரான ஒரு தனி நபர் கடனுடன் வாடிக்கையாளர்கள் உடனடி கடன் ஒப்புதல் பெறும் பலனைப் பெற்றிருக்கிறார்கள்.

இந்திய குடிமக்களுக்கு ஆதார் கார்டு மற்றும் PAN கார்டு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. பயோமெட்ரிக் சரிபார்ப்பிற்கான உங்கள் தகுதி வரம்பை ஆதார் கார்டு பூர்த்தி செய்கிறது, மற்றும் ஒரு PAN கார்டு கடன் வாங்குபவரின் நிதிநிலை மற்றும் வரிவிதிப்பு நடவடிக்கைகளை சரிபார்க்கிறது. எனவே, ஒரு தனி நபர் கடன் விண்ணப்ப செயலாக்கத்தை ஆரம்பிக்கும் போது உங்கள் ஆதார் கார்டு மற்றும் PAN கார்டை தயாராக வைத்திருங்கள்.
 

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

 

கே.1. PAN கார்டின் மீது நாம் கடன் வாங்க முடியுமா?

ப: ஆமாம், ஆன்லைனில் உடனடி கடன் app-கள் மூலமாக தனி நபர் கடன் வாங்கும் போது சமர்ப்பிக்க வேண்டிய கட்டாய ஆவணங்களில் PAN கார்டும் ஒன்று. ஆனால் PAN கார்டு மட்டுமே ஒரு கடன் ஒப்புதலுக்கு உதவாது. கடன் வாங்குபவர்கள் ஆதார் கார்டு மற்றும் PAN கார்டு இரண்டையும் சமர்ப்பிக்க வேண்டும்.


கே.2. ஆதார் கார்டு மட்டுமே வைத்துக் கொண்டு நான் ஒரு தனி நபர் கடன் வாங்க முடியுமா?

ப: ஆமாம், ஆன்லைனில் உடனடி கடன் app-கள் மூலமாக தனி நபர் கடன் வாங்கும் போது சமர்ப்பிக்க வேண்டிய கட்டாய ஆவணங்களில் PAN கார்டும் ஒன்று. ஆனால் PAN கார்டு மட்டுமே ஒரு கடன் ஒப்புதலுக்கு உதவாது. கடன் வாங்குபவர்கள் ஆதார் கார்டு மற்றும் PAN கார்டு இரண்டையும் சமர்ப்பிக்க வேண்டும்.


கே.3 ஒரு PAN கார்ட் மட்டுமே வைத்துக் கொண்டு எவ்வாறு நான் ஒரு தனி நபர் கடன் பெற முடியும்?

ப: கடன் கொடுப்பவர்களுக்கு கடன் வாங்குபவர்களின் நிதி வரலாறு மற்றும் கடன் தகுதியை சரிபார்க்க அவர்களின் PAN கார்டு தேவை. PAN கார்டு ஒரு நல்ல கிரெடிட் ஸ்கோரை பிரதிபலித்தால், ஒரு தனி நபர் கடன் ஒப்புதல் கிடைப்பது எளிது!


கே.4 ஆதார் கார்டின் மீது நான் எவ்வளவு கடன் பெற முடியும்?

ப: கடன் தொகை ஒரு அக உணர்வு சார்ந்த விஷயம். ஆதார் கார்டாயிருந்தாலும் அல்லது PAN கார்டாயிருந்தாலும் தேவைப்படும் கடன் தொகை ஒரு கடன் வாங்குபவரின் தேர்வு/தேவையைப் பொறுத்தது. ஆனால் கடன் வழங்குபவர்களுக்கு கடன் அனுமதிக்கு ஒரு வரம்பு உண்டு. சில கடன் அளிப்பவர்கள் தனி நபர் கடன்களை ரூ. 2 லட்சம் வரை வழங்குகிறார்கள் மற்றும் சிலர் உடனடி கடன்களுக்கு 5 லட்சம் வரை ஒப்புதல் அளிக்கிறார்கள்.


கே.5 ஒரு ஆதார் கார்டிலிருந்து நான் கடன் பெற முடியுமா?

ப: ஆம், நீங்கள் உடனடி தனி நபர் கடன் app-களிலிருந்து ஆதார் கார்டு மூலமாக கடன் பெற முடியும். ஆன்லைன் கடன் ஒப்புதலுக்கென, ஆதார் கார்டு கட்டாயமாக தேவைப்படும் ஆவணங்களில் ஒன்று.


கே.6. நான் ஆதார் கார்டின் மீது ஒரு கடன் பெற முடியுமா?

ப: ஆம், நீங்கள் ஆதார் கார்டின் மீது ஒரு தனி நபர் கடன் பெறலாம். இது பெயர், வயது, முகவரி மற்றும் நாடு உள்ளிட்ட தனி நபர் அடையாள சரிபார்ப்புக்கு தேவையான ஒரு கட்டாய ஆவணம். உங்கள் ஆதார் கார்டு எண் உங்கள் மொபைல் எண்ணுடன் இணைக்கப் பட்டிருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.


கே.7. நான் ஒரு ஆதார் கார்டிலிருந்து எப்படி ஒரு உடனடி கடன் பெற முடியும்?

ப: உடனடி தனி நபர் கடன் appகளிலிருந்து ஆதார் கார்டு மூலமாக உடனடி கடன்கள் பெற முடியும். ஆன்லைன் மூலமாக ஒரு கடன் விண்ணப்பிக்க படும் போது, அது KYC சரிபார்ப்பு செயல்முறை தொடர்புடையது. இங்கே, ஆதார் கார்டு காகிதமற்ற வடிவத்தில் சமர்ப்பிக்க வேண்டிய கட்டாய ஆவணங்களில் ஒன்று.


கே.8. ஒரு ஆதார் கார்டிலிருந்து நான் எவ்வாறு ஒரு கடன் பெற முடியும்?

ப: கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து உடனடி தனி நபர் கடன் app-ஐ டவுன்லோடு செய்யுங்கள். உங்கள் அடிப்படை விவரங்களுடன் பதிவு செய்யுங்கள். ஆவண சரிபார்ப்பின் போது, உங்கள் மொபைல் எண்ணுடன் இணைக்கப் பட்ட ஆதார் கார்டு எண்ணை பதிவு செய்யுங்கள். இது காகிதமற்ற வடிவத்தில் சமர்ப்பிக்க வேண்டிய PAN கார்டு போன்ற மற்ற ஆவணங்கள் தொடர்புடைய ஒரு நிகழ்நேர செயல்முறை.


கே.9. நான் ஒரு PAN கார்டிலிருந்து எவ்வாறு உடனடி கடன் பெற முடியும்?

ப: கடன் வழங்குபவர்கள் கடன் பெறுபவரின் திரும்ப செலுத்தும் திறன், நிதி வரலாறு, கடனைத் திரும்ப செலுத்தும் வழக்கங்கள், மற்றும் கிரெடிட் ஸ்கோர் போன்றவற்றை PAN கார்டிலிருந்து சரிபார்க்கிறார்கள். இந்த அனைத்து வரையறைகளையும் பூர்த்தி செய்யும் சுய விவரங்கள் கொண்ட ஒரு கடன் வாங்குபவர் PAN கார்டிலிருந்து உடனடி கடனை பெறுகிறார்.

To Avail Personal Loan
Apply Now